• இருக்குமிடம்:  
  • முகப்பு > செய்திகளும் நிகழ்வுகளும் > Uncategorised

    முன்னர் 'சிலோன்' என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்ட இலங்கையின் தற்போதைய கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களத்தின் ஆரம்பம் பிரித்தானிய ஆட்சி காலம் வரையிலான நீண்ட வரலாற்றினைக் கொண்டுள்ளது. தற்போதுள்ள தகவல்களுக்கு அமைய 1976 ஆம் ஆண்டிலே நாட்டின் கரையோரப் பிரதேசங்கள் பிரித்தானியர் ஆட்சியின் கீழ் காணப்பட்ட காலப் பகுதியிலே, அதாவது 1799 ஆம் ஆண்டளவில் செசில் சுமித் என்பவர் கணக்காய்வாளராக பணியாற்றியுள்ளார். அவரது பதவிப் பெயர் கணக்காளர் மற்றும் கணக்காய்வாளர் இருந்தபோதிலும் அவர் ஆற்றிய கடமைகள் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அவரது பதவிப் பெயருக்கேற்ப சிலநேரம் அவர் திறைசேரியின் கணக்காளராகவும் இருந்திருக்கலாம் என்றும் திறைசேரியின் கணக்குகள் உட்பட அரசாங்கத்தின் கணக்குகள் தொடர்பாக பொறுப்புக்கூறும் கணக்காய்வாளராகவும் இரட்டைக் கடமையாற்றியிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. தற்போதைய நிலைக்கு ஏற்ப அவ்வாறான ஒரு திட்டமானது சுயாதீனமாகவும் திறன்மிக்க முறையிலும் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு பொருத்தமானதாகக் கருத முடியாது.

    1806 ஆம் ஆண்டிலே கணக்கீட்டு நடவடிக்கைகள், கணக்காய்வுத் திணைக்களத்தின் தலைமை அதிகாரியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் பதவிப் பெயரிலே ஒரு முக்கியமான முhற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதன் போது பதவிப் பெயரானது சிவில் கணக்காய்வாளர் மாற்றமடைந்தது. பிரித்தானியர்களினால் இதன் கடமைகளை விஸ்தரிக்கும் தீர்மானம் ஒன்றினை எடுக்கும் வரை கணக்காய்வு அலுவலகமானது தொடர்ச்சியாக 35 வருடங்கள் ஒரு தனி அலகாக இருந்து வந்துள்ளது. பின்னர் 1841 ஆம் ஆண்டிலே அது திறைசேரியின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டதுடன் அதன் பொறுப்பு அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர் கணக்காய்வாளர், கணக்காளர் நாயகம் மற்றும் வருமான கட்டுப்பாட்டாளர் என்ற மூன்று பதவிகளை வகித்து வந்தார். வருமான கட்டுப்பாட்டாளராக இவர் உயர் பதவி வகிப்பதனால் அவருக்கு அச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை நிர்வகித்து வந்த பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களினால் நிறைவேற்றுச் சபையின் அங்கத்துவமும் பெற்றுக் கொடுக்கப்பட்டது. இந்நிலையானது உண்மையிலேயே கணக்காய்வாளரின் தரத்தினை உயர்த்துவதற்கு பெரிதும் உதவியுள்ளதுடன், கணக்காய்வுப் பணிகளின் செயற்திறன் தொடர்பாக கவனத்தில் கொள்ளும் போது இதனை முன்னேற்றகரமான தீர்மானமாகக் கருதமுடியாது.

    1907 ஆம் ஆண்டிலே கணக்காய்வு அலுவலகமானது திறைசேரியில் இருந்து பிரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படும் வரையில் சுமார் 66 வருட காலப்பகுதியில் காலம் முழுவதும் கணக்காய்வுத் திணைக்களமானது தொடர்ச்சியாக இந்தத் திட்டத்தின் கீழ் செயற்பட்டது. இந்த தூரநோக்கு கொண்ட தீர்மானமானது பதில் கடமை புரிந்த காலணித்துவ செயலாளரினால் பின்வருமாறு வெளியிடப்பட்டது. 'அதி உத்தம ஆளுநரினால் காலனித்துவ அரச செயலாளரின் அனுமதியின் மீது 1907 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கணக்காய்வாளர், கணக்காளா நாயகம் மற்றும் வருமானக் கட்டுப்பாட்டாளர் என்ற பதவிகளை ஒரு தனிநபரினால் நிறைவேற்றப்படுவதனை நிறுத்துவதற்கும், எதிர்வரும் காலங்களில் (அ) வருமானக் கட்டுப்பாட்டாளர் (ஆ) காலனித்துவ கணக்காய்வாளர் எனும் பெயர் கொண்டு அழைக்கப்படும் தனியான இரண்டு பதவிகளை உருவாக்குவதற்கும் கணக்காளர் நாயகத்தின் கடமைகளை திறைசேரியினால் நிறைவேற்றுதல் வேண்டுமெனவும் மகிழ்ச்சியுடன் கட்டளையிடப்படுகின்றது.'

    கணக்காய்வுத் திணைக்களத்தின் தலைவரின் பதவிப் பெயரும் காலனித்துவ கணக்காய்வாளர் என்று மாற்றப்பட்டுள்ளது என்றும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.

    அதிலிருந்து இந்த திணைக்களமானது தனியாக இயங்கிவந்ததுடன் 1931 ஆம் ஆண்டிலே டொனமூர் அரசியலாப்பு அறிமுகம் செய்யப்பட்டபோது இதன் தலைவரின் பதவிப் பெயர் கணக்காய்வாளர் என மாற்றமடைந்தது. இந்த பதவிப் பெயரானது இன்று வரையில் தொடர்ந்தும் இருந்து வருவதுடன் அதுவரையில் கணக்காய்வுத் திணைக்களத்தின் பிரதான பதவியினை ஒரு பிரித்தானிய இனத்தவரே வகித்து வந்தார். டொனமூர் யாப்பின் கீழ் நியமிக்கப்பட்ட முதலாவது கணக்காய்வாளராகவும் இந்த நாட்டிலே அந்த பதவியினை வகித்த முதல் நபராகவும், ஓ.ஈ. குணதிலக்க விளங்குகிறார். (பின்னர் சேர் ஒலிவர் குணதிலக்க ஆனார்) அவ்வாறே அவர் 1948 ஆம் ஆண்டிலே பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றுக்கொண்டதன் பின்னர் இந்நாட்டின் முதலாவது ஆளுநராகவும் செயற்பட்டார்.

    கணக்காளர் முதல் கணக்காய்வாளர் வரை அதேபோன்று காலனித்துவ கணக்காய்வாளர் பதவி வரையிலும் பல்வேறு பதவிகளை வகித்த அனைத்து நபர்களும் இந்த நாட்டின் அரசியல் அமைப்பு ரீதியில் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலை இருக்காத போதிலும்கூட, இந்நாட்டில் இருந்த பிரித்தானிய பிரதிநிதிகளின் ஊடாக பிரித்தானிய அரசாங்கத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருந்தார்கள். எவ்வாறாயினும், 1931 ஆம் ஆண்டிலே டொனமூர் யாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் முதல் முறையாக கணக்காய்வாளர் பிரித்தானிய அரசாங்கத்திற்கு அன்றி இந்நாட்டின் அரசியல் அமைப்புக்கு பொறுப்புக்கூற வேண்டிய நபராக மாற்றப்பட்டார்.

    1931 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பின் மூலம் கணக்காய்வு பற்றிய பணிகள் தொடர்பாக ஓரளவு விளக்கத்துடன் வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளதுடன், 1947 ஆம் ஆண்டிலே டொனமூர் யாப்பிற்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட சோல்பரி யாப்பின் மூலம் கணக்காய்வுப் பொறுப்புக்கள் மற்றும் அதன் அதிகாரங்கள் என்பன மிகவும் பொதுவான வடிவத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உறுதியான ஒரு கூற்றாக அதன் மூலம் கணக்காய்வாளர் பாரிய அளவிலான பொறுப்புக்களை ஒப்படைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு சட்டங்களின் ஊடாகவும் கணக்காய்வாளர் அரசாங்கத்தின் திணைக்களங்களது கணக்குகளை கணக்காய்வு செய்வது தொடர்பாக பல்வேறு வழிகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் என்பவற்றின் கணக்குகளை கணக்காய்வு செய்வதற்காக அவ்வாறான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டில்லை. 1972 ஆம் ஆண்டிலே அதுவரையில் சிலோன் என்று அழைக்கப்பட்ட இந்நாடானது இலங்கை குடியரசாக மாற்றப்பட்ட புதிய அரசியல் அமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் வரையில் இந்த நிறுவனங்கள் உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளின் கீழ் கணக்காய்வாளரினால் கணக்காய்விற்கு உட்படுத்தப்பட்டது.

     

    Read Full Documentary

    Find Audit Reports

     

    BCMath lib not installed. RSA encryption unavailable