• இருக்குமிடம்:  
  • முகப்பு > பணிகளும் அதிகாரமும்

    கணக்காய்வாளளர் தலைமை அதிபதி திணைக்களத்தின் ஊடாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியால் முன்னெடுக்கப்படும் கணக்காய்வானது குறித்த முகாமை, பொதுத்துறை நிறுவனங்களின் செயலாற்றல்களின் மீளளாய்வு மற்றும் கணக்களிப் பொறுப்பு மற்றும் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தல் மீதான சுதந்திரத்தை வழங்குகின்றது. கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம் பாராளுமன்றத்தின் தேவைகள் மற்றும் எதிர்பாரப்புக்கள், நிறைவேற்றுனர் மற்றும் அதன் வாடிக்கையாளர், பொதுத்துறை செயலாற்றல் மற்றும் கணக்களி பொறுப்பு என்பவற்றிற்கு பெறுமதி சேர்ப்பதற்கு என்பதைச் செய்வதற்கு நோக்காக கொண்டுள்ளது. இச் சுதந்திரத்தன்மை மீளாய்வு முன்னுரிமை, பிரமாணம், சகல நியதிச்சட்டச் சபை மற்றும் வேறு பிரமாண வேண்டுகைகளுடன் இணங்கல், மற்றும் செயற்பாடுகளின் சிக்கனத் தன்மை, வினைத்திறன், பயனுறுதி, என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு செயற்படுகின்றது.

    கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காயவிற்கான ஆணை

    இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பு சட்டத்தின் 154 ஆம் உறுப்புரை அறிக்கையிடக் கூடிய பொதுத் துறை நிறுவனங்களின் கணக்காய்விற்கு கணக்காய்வாளர் தலைமை அதிபதி ஆணையை வழங்குகின்றது.

    சகல அரசாங்க திணைக்களங்கள், அமைச்சரவை அலுவலகங்கள், நீதிச் சேவை ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு, நிர்வாகத்திற்காக பாராளுமன்ற ஆணையாளளர், பாராளுமன்ற செயலாளர் நாயகம், மற்றும் தேர்தல் ஆணையாளளர், உள்ளுராட்சி அதிகார சபைகள், பொதுக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் வணிக அல்லது ஏதாவது ஏழுத்துமூல சட்டத்தின் கீழ் அரசினால் பொறுப்பேற்கப்பட்ட நிறுவனங்கள்.

    மேற்குறித்த ஆணை பின்வரும் நியதிகளால் மேலும் விரிவாக்கியுள்ளது.

    • 1971 இன் 38 ஆம் இலக்க நதி அதிகாரச் சட்டத்தின் பகுதி II பொதுக் கூட்டுத்தாபனங்களின் கணக்காய்விற்காக வழங்குகின்றது.
    • 1987 இன் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் அதிகாரச் சட்டத்தின் 23 ஆம் பிரிவு மாகாண சபைகளின் காணக்காய்வை வழங்குகின்றது.
    • மா நகர சபைகள் கட்டளைளயின் (அத்தியாயம் 252) 219 ஆம் பிரிவு மா நகர சபைகளின் காணக்காய்வை வழங்குகின்றது.
    • நகர சபைகள் கட்டளைளயின் (அத்தியாயம் 255) 181 ஆம் பிரிவு நகர சபைகளின் காணக்காய்வை வழங்குகின்றது.
    • 1987 இன 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச் சட்டத்தின் 172 ஆம் பிரிவு பிரதேச சபைகளின் காணக்காய்வை வழங்குகின்றது.
    • 2000 இன் 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி அதிகாரச் சட்டத்தின் 58 ஆம் பிரிவு கமநல அபிவிருத்தி சபைகளின் காணக்காய்வை வழங்குகின்றது.
    • 1993 இன் 47 ஆம் இலக்க விiயாட்டுகள் அதிகாரச் சட்டத்தின் 9 ஆம் பிரிவு விiயாட்டுச் சங்கங்களின் காணக்காய்வை வழங்குகின்றது.

    கணக்காய்வாளர் தலைமை அதிபதி அவருடைய வேலையில் அவருக்கு எதவிபுரிவதற்கு தகமையுடைய கணக்காய்வாளர்களின் சேவையைப் பெறுவதற்கு அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் அதிகரரம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் கணகாய்வுடன் தொடர்புடைய ஏதாவது தொழில்நுட்ப, தொழில்ரீதியான அல்லது விஞஙான ரீதியான பிரச்சனைகளின் பரீட்சிப்பிற்காக நிபுணர்களின் உதவியைப் பெறுவதற்கும் அதிகாரத்தை கொண்டுள்ளார்.

    அரசியலமைப்பு சட்டத்தின் 154 (5) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதி,

    சகல புத்தகங்கள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய தொடர்புடைய ஆவணங்கள், களஞ்சியங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் மற்றும் அவருடைய கடமைகள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றின் செயலாற்றல் மற்றும் நிறைவேற்றலிற்கான முக்கியத்துவமாக அத்தகைய தகவல்கள் மற்றும் விளக்கங்களுடன் சமர்ப்பிக்கப்ட்ட வேண்டியவைகள் என்பதாகவுள்ளது.

    கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் சுதந்திரத் தன்மை

    கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் சுதந்திரத் தன்மை அரசியலமைப்பினாலேயே பாதுகாக்கப்படுவதுடன் 153 ஆம் உறுப்புரையின் மூலம் குறிப்பிடப்பட்டவாறு அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையுடன் சனாதிபதியால் நியமிக்கப்படும் கணக்காய்வாளர் தலைமை அதிபதி தனது நன்நடத்தைக் காலப்பகுதியின் போது கடமையை மேற்கொள்வார் என விதந்துரைத்துள்ளது.

    அவர் சுகயீனமுற்ற நிலையிலோ அல்லது சித்தசுவாதீனமுற்ற நிலையிலோ அல்லது பாராளுமன்றத்தின் அறிவித்தலை அடுத்து மாத்திரமே சனாதிபதி அவர்களால் அவரது கடமையில் இருந்து நீக்கப்படலாம்.

    அரசியலமைப்பின் 153 ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வளர் தலைமை அதிபதியின் சம்பளம் பாராளு மன்றத்தாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது எனவும் திரண்ட நிதியத்தில் சாட்டப்படக்கூடியது எனவும் அவரது கடமைக் காலத்தின் போது குறைக்கப்படமுடியாததெனவும் மேலும் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

    அரசாங்கத்தின் எந்த அமைச்சரினதும் அல்லது உத்தியோகத்தரினதும் கண்காணிப்பின் கீழ் கணக்காய்வாளர் செயற்படமாட்டார்.

    Find Audit Reports

     

    BCMath lib not installed. RSA encryption unavailable