• இருக்குமிடம்:  
  • முகப்பு > செய்திகளும் நிகழ்வுகளும் > Uncategorised

    கணக்காய்வாளர் தலைமை அதிபதி அவரின் தற்றுணிவின் பிரகாரம் கணக்காய்வின் நோக்கெல்லையை தீர்மானிக்கிறார். அத்துடன் இது சம்பந்தமாக அவருக்கு 1995 இன் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அறிமுகப்படுத்தப்பட்டவாறான நடைமுறையிலுள்ள நியமங்கள், வழக்காறுகள் மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் (ஐ.சீ.ஏ.எஸ்.எல்) ஏற்றுக் கொள்ளப்படுகின்ற சிறந்த நடைமுறைகள், அதிஉயர் கணக்காய்வு நிறுவனங்கள் மீதான சர்வதேச அமைப்பு (இன்டோசாய்), அதிஉயர் கணக்காய்வு நிறுவனங்கள் மீதான ஆசிய நிறுவகம் (அசோசாய்) மற்றும் பாராளுமன்ற அரசாங்கக் கணக்குக் குழு மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் வழிகாட்டல்கள் மூலம் வழிகாட்டப்படுகின்றது. இதற்கும் மேலாக அரசாங்க கூட்டுத்தாபனங்கள் தொடர்பில் கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் திட்டமிடப்பட வேண்டிய நோக்கெல்லை 1971 இன் 38 ஆம் இலக்க நிதியதிகாரச் சட்டத்தினால் விபரமாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் தெளிவான மூன்று சட்டபூர்வ அறிக்கைகள் அதாவது, முகாமைத்துவத்திற்கு சமர்ப்பிக்கப்படும் விபரமான அறிக்கை, கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையுடன் பிரசுரிக்கப்பட வேண்டியதோர் அறிக்கை மற்றும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டியதோர் அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்படுகின்றன. நிதி அதிகாரச் சட்டத்தில் விபரமாகக் குறிப்பட்டுள்ளதன் பிரகாரம் இயலுமான அளவுக்கு பரிசீலித்து பின்வரும் விடயங்களை கணக்காய்வின் நோக்கெல்லைக்குள் கணக்காய்வாளர் தலைமையதிபதி கொண்டுவருதல் வேண்டும். • கூட்டுத்தாபன நடவடிக்கைகளுடன் தொடர்புடைய புத்தகங்கள், பதிவேடுகள், ஆவணங்கள், முறைமைகள், நடைமுறைகள் என்பவற்றில் தொடர்ச்சியான மதிப்பீடுகளையும் அவற்றிலிருந்து தேவையான தகலல்களையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் நிறுவன முறைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவாகவும் வடிவமைக்கப்பட்டிந்தனவா என்றும், • கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகள் அதனுடன் தொடர்புடைய சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுக்கு அமைவாகவும் கூட்டத்தாபன நிர்வாகம் நியாயமானதாக காணப்படுகின்றதா என்பதும், • நிதியங்களின் பொறுப்புக்கள் மற்றும் அந்நிதியங்களின் பயன்படுத்தல்கள் சிக்கனமாகவும் வினைத்திறனுடனும் காணப்பட்டதா என்பதும், • காசைப் பாதுகாத்து வைத்திருத்தல் மற்றும் ஆதனங்களின் மீதான பாதுகாப்பு முறைகள் திருப்திகரமாக காணப்பட்டதா என்பதும், • கணக்கியல் கோட்பாடுகள், நிதியியல், மதிப்பாய்வுகள் என்பவற்றுடன் இணங்கும் வகையில் கருத்திற் கொள்ளப்பட்ட காலப்பகுதிக்குரிய கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகள் உண்மையானதும் நியாயமானதுமான நோக்கை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதும், • கணக்காய்வாளர் தலைமையதிபதி தேவையெனக் கருதும் ஏனைய விடயங்களும் ஆகும்.

    Find Audit Reports

     

    BCMath lib not installed. RSA encryption unavailable